வழக்கம் போல scattered, unorganised thoughts…
கடிகார முட்கள் மீது பொறாமைப்படாத ஜீவாத்மாக்களுக்கு… வாழ்தலில் சலிப்படைந்த, ஒன்றே போல் வாழ்தலில் சலிப்படைந்த, தினந்தினம் ஒன்றே போல் வாழ்தலில் சலிப்படைந்த ஜீவன் ஒன்று மந்தைக்குத் திரும்பும் பயணத்தில் நிமிர்ந்து வான் பார்த்து ஆறுதல் அடைந்த கதை தெரியுமா?
#IniQuotesChallenge (https://www.instagram.com/explore/tags/iniquoteschallenge/ ) தினம் ஒரு மேற்கோள் ஆரம்பிக்கும் போது எத்தனை நாட்கள், எத்தனை புத்தகங்கள் இந்த மாதிரியான கணக்குகள் இல்லாம ஆரம்பிச்சேனே ஒழிய… வேறுவிதமான விளையாட்டுத்தனங்களுடன் ஆரம்பிக்கலை.

இத்தனை நாட்கள் தொடர்ந்து செய்ததை சாதனையா எல்லாம் நினைக்கலை. 365 நாள்களும் வெவ்வேறு மனிதர்களை எழுத வைத்து இங்கே இதை பல வருடங்களுக்கு முன்னாடியே செய்திருக்காங்க, Shree Vani நித்தில் எழுதி ஆரம்பிச்சது https://opticaltrance.blogspot.com/…/mumbe-bhaapbap-grrr-mu… இது நடந்த ஒரு வருடத்தில் இதே போல தினம் 50 பக்கங்கள் படிக்க ஆரம்பிச்சு அதிகாரப்பூர்வ கணக்குகள் படி 16530பக்கங்கள் முடிச்சேன்… அப்போதைய மனநிலை + introversion + வெளிக்காட்டாத குணம்னு அதையெல்லாம் Goodreads க்குள்ள மட்டும் முடிச்சேன்…
“வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல் கழுத்து போயினும் கைக்கொள்ளாதே” என்ற பாவேந்தரின் வரிகள் தாத்தா எப்போவும் கண்ல படுற மாதிரி எழுதிவைச்சிருந்தாரு… அந்த மாதிரி, ஒழுக்கம் தவறாத வழக்கங்கள் சமூகவலைத்தளங்களின் ஆதிக்கத்துக்குப் பிறகு அதிகமாயிருக்கு… இந்த மாதிரியான challenges அதிகமாக கடந்த சில ஆண்டுகளில் பரவ ஆரம்பிச்சிருக்கு. பத்தாண்டுகள் தொடர்ந்து பாரதம் எழுதுறது கூட இந்த வகையில் சேர்ந்தாலும், நான் அதை கவனிக்கலை… நூறு நாட்களுக்கு தினமொரு சேலை, நூறு நாட்களுக்கு தினமொரு நிரல் எழுதுறது… #inktoberஎன்ற பெயரில் அக்டோபர் முழுக்க தினமொரு ஓவியம் வரைவது… இதெல்லாம் ஏன் சொல்றேன்னா இது சாதாரண விசயம்… சமூக ஊடகங்களின் பயன்களில் இது ஒன்று…
இவையெல்லாம் நாசூக்காக தன்னை வெளிக்காட்டிக்குறதில் வந்து நின்றாலும், சில அறிமுகங்கள்,திறப்புகள் கிடைக்கும். இத்தனை ஆண்டுகளில் என்னிடம் சேர்ந்த, நான் வாசித்த புத்தகங்களைப் பற்றித் தம்பட்டம் அடிச்சிருக்கேன். யாராவது சில புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சிருக்கலாம். இத்தனைக்கும் நான் செய்தது ரொம்ப சுலபமான வேலை.
வீட்டு முன்புறம் சாலையைப்பார்த்த மாதிரிக்கு இருந்த கரும்பலகையில் அப்பா திருக்குறள் எழுதுவார், நானும் சிலமுறை. பள்ளியில் வழிபாட்டுக் கூட்டத்திலும் தினமொரு மேற்கோள்களைப் பயன்படுத்தி இருக்கேன். இது எனக்கு புதுசும் இல்லை… மறுபடியும் சுயதம்பட்டம்…
முதல் மேற்கோள், என்னை ரொம்ப பாதிச்ச when breath becomes air புத்தகத்தில் இருந்து… மரணம்/முடிவைப் பத்தின என் பார்வையை மாத்திஅமைச்ச புத்தகம் துவக்கமா அமைஞ்சது… அதைப்பற்றி பேசவேண்டாம்…
—
100 நாள் முடிஞ்சது, இதோட முடிஞ்சதா என்ன??? அத்தனை மொழிகளின் எழுத்துகளை அடுக்கும் அத்தனை சாத்தியங்களைப் பயன்படுத்தினாலும் எண்கள் எப்போதும் முடிவற்றவை. தினம் ஒரு மேற்கோள் அப்படின்ற கால இடைவெளியும் கட்டுப்பாடும் கடந்து beyond and infinite மாதிரி இது தொடரும்…
சமூக ஊடகங்களின் குறைபாடுகளில் பெரிதாக அலட்டிக் கொள்ளப்படாத, ஆனால் மிக மோசமான ஒரு விசயம் Never ending loop. இது தவிர்க்கப்பட சில இடங்களில் ஒன்று Instagram. இதோடசேர்த்து 3X3 கட்டங்களில் விதவிதமான patternகளில் விளையாட முடியும். கடந்த 20 நாள்களில் ரொம்ப எளிமையான ஒரு pattern தான் முயற்சி செய்து பார்த்தேன். வேறு ஒரு நல்ல வடிவத்தில் இந்த மேற்கோள்களைத் தொடரலாம்… கூடவே இன்னொரு ஒழுக்கம் மீறாத பழக்கத்துடன்…

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License