«««< HEAD

=======
c4c4e4e455cff3e80d9ff97aadcae94fe557da15
கடந்த பத்து வருசத்துல என் சொந்தக் கனிணி எதுலயும் விண்டோஸ் அதிகபட்சம் 3 மாசம் கூட இருந்ததுல்ல… அப்பவும் ட்யூவல் ஓஎஸ்ஸா ஒரு ஓரமாத்தான் தூங்கியிருந்திருக்கு… கடந்த ஒன்றரை வருசமாத்தான் அலுவலக கனிணிலயும்… அதையும் ஒரு வழியா ஒழிச்சுக்கட்டியாச்சு… ஒரு மக்குப்பையனைப் பாக்குற ஃபீலோடவே அதைப் பாத்திருக்கேன்… அட இது செமையா இருக்கேன்னு ஒரு விஷயம் கூட அதுல எனக்கு தெரிஞ்சதில்ல… விண்டோஸ் 10ல சிலது பார்த்ததும் புடிச்சது… நீங்க திருந்தவே மாட்டீங்கடான்னுதான் அடுத்த சில நாட்கள்ல அதைப் பாக்கும் போது தோணும்.

விண்டோஸ் நிகழ்ச்சி ஒன்னுல, ஐ போனை பாக்கெட்ல இருந்து எடுத்தது… மைக்ரோசாப்ட் லவ்ஸ் லினக்ஸ்னு பின்னாடி ஸ்க்ரீன் தெரிய பேசுனது… Surface pro… visual code, MIT license-ல் வெளிவந்ததுன்னு ஏதோ அங்கங்க லேசா இந்த மண்டை கண்ல பட்டுகிட்டே இருந்தது… #HitRefresh-னு புத்தகத்தோட பேரைக் கேட்டதும்… ஆமா ஆமா ஒரு காலத்துல திரும்ப திரும்ப அந்தக் கருமத்தைத்தான் அழுத்திட்டிருக்கனும்னு தானே சொல்ல வரீங்கன்னு நக்கலா விட்டுட்டேன்… வழக்கம் போல இதுவும் ஒரு சுயசரிதைன்னு ஒதுக்கிவிட்டாச்சு…
ஆனா, இந்த குக்கீஸ், DMP சமாச்சாரங்கள் திரும்ப திரும்ப கண் முன்னால கொண்டு வரவும்… ஓசியில் கிடைச்ச புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பிச்சு… அவ்வளவு அனுபவங்கள்… அத்தனையையும் என் துறை சார்பான விஷயங்களோட எனக்கு கனெக்ட் ஆனது… ஒரு பெரிய முடிவு, பெரிய சறுக்கல், உண்மை நிலவரத்தைப் புரிஞ்சுகிட்டு மாத்தின சின்ன ஸ்ட்ரேட்டஜின்னு… திரும்ப மேல எழுந்து வரதுன்னு… அத்தனை துறைகளுக்கும் பொருந்துற சில விஷயங்கள்… “friends or frenemies” இந்த ஒரு அத்தியாயம் செம… அதுவும் பழைய பஞ்சாயத்துகள் எல்லாம் தெரிஞ்சு, அதோட பொருத்திப் பார்த்தா… இந்த மக்குப்பையலை ஏன் திரும்பிப் பார்த்தோம்னு புரிய ஆரம்பிச்சது…
இன்னும் புத்தகத்தை முழுசா படிச்சு முடிக்கல… ஆனா, பாதி வரைக்குமே செம இன்ஸ்பையரிங்… அதுக்குள்ள இன்னொருத்தரையும் நீ படிச்சே ஆகனும்னு வம்பு பண்ணி வாங்கி குடுத்திருக்கேன்…
பி.கு 1: முழுசா படிச்சு முடிக்கும் போது கடுப்பாகி, எழுதாமப் போயிட்டா என்ன பன்றதுன்னு எழுதியாச்சு…
பி.கு 2: ஒரு ஓப்பன் சோர்ஸ் சப்பொர்ட்டருக்கு ஏன் இந்தப் புத்தகம் புடிக்குது??? (friends or frenemies-ல கிட்டத்தட்ட பதில் இருக்கு)
பி.கு 3: நமக்கு சுயசரிதைகள் புடிக்கக்கூடாதே…
பி.கு 4: புத்தகம் தமிழ் மொழிபெயர்ப்பும் இருக்கு…

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License