* இது முழுக்க முழுக்க Random,Scattered thoughts… கொஞ்சம் பெரிய பதிவு…
-
இது காண்ஸ்பிரசி தியரியா கூட உங்களுக்குப்படலாம்… எல்லா தகுதித்தேர்வுகளுடைய குறுகிய கால நோக்கம்… தகுதியை உறுதி செய்வது… நீண்ட கால நோக்கம் இட ஒதுக்கீட்டைத் தூக்கியெறிவது… மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் கட்டாயம் தெரிஞ்சுருக்கனும்ன்றது எப்படி அந்தக்காலத்தில் தகுதியாகப் பார்க்கப்பட்டதோ… அப்படித்தான் குறைந்தபட்சதகுதியை நிர்ணயம் செய்யும் வடிகட்டியா தகுதித்தேர்வுகள்…
-
தகுதித்தேர்வுகள் அத்தனையும் இந்த நான்கில் ஒன்றை தேர்ந்தெடுன்றதை மையமா வைத்தே சுத்திவரது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? E=mc^2 என்ற சூத்திரத்தின் முழு நிரூபனத்தை கணிதவியல் வடிவத்துல படிச்ச மாணவனிடம், அந்தச் சமன்பாடு இயற்கையில் என்ன தாக்கம் ஏற்படுத்துங்குறதை முழுமையாகப் போதிக்காத கல்விமுறையை குத்தம் சொல்வோம்… ஆனா, நுழைவுத்தேர்வுகள், இந்தச் சூத்திரத்தில் ஒரு வாய்ப்பில் ஒளியின் திசைவேகத்தை எண்ணாலும், இன்னொரு வாய்ப்பாக அதன் யூனிட்டில் சிறிய குழப்பத்தையும் குடுத்து, மயக்கத்தைத் தர தேர்வு முறை சிறப்பான மாணவர்களைத் தேர்ந்தெடுக்க உதவும்ன்றது என்ன விதமான தர்க்கம்?
-
இந்தக் கொள்குறி வகை தேர்வுகள், தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கானது அல்ல, தகுதியல்லாதவர்களை கழித்துக்கட்டுவதற்கானது. எப்படிப் பார்த்தாலும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுறாங்கன்றது உங்கள் வாதமாயிருந்தால்… சாரி பாஸ்… இந்த வகையானத் தேர்வுகளை சுலபமா ஸ்மார்ட் வொர்க் செய்தாலே தட்டிவிடலாம்… அந்த ஸ்மார்ட் வொர்க்கிலும் வேற வேற level of smartworkness உண்டு… எதுவுமே தெரியாம ஸ்மார்ட் வொர்க்கினால் மட்டுமே க்ராக் செய்ய முடிந்தவர்கள்… அரைகுறையான தெரிதல்+ஸ்மார்ட் வொர்க்… உங்களுக்குத் தேவையானது எல்லாம்… Process of Elimination… இந்த ஸ்மார்ட் வொர்க் கைவரப்பெற 12 வருச பள்ளிக்கல்வி தேவை இல்லை… இந்த ஸ்மார்ட் வொர்க்கிற்குத் தேவையான குறுக்குவழிகள் இல்லை Academic Language-இல் சொல்லனும்னா Shortcuts கற்பதற்கான ஓராண்டு பயிற்சி… கடந்த சில ஆண்டுகளில் இந்தக் குறுக்கு வழிப்பயிற்சிக்கு இன்னொரு புதிய வகுப்பு முறையும் அறிமுகமாகி இருக்கு Fast track course… கடைசியா நீங்கள் தேர்ந்தெடுப்பது நீங்கள் முன்வைக்கும் தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுத்தல் இல்லை… ஸ்மார்ட் வொர்க் பழகியவர்களைத் தேர்ந்தெடுப்பது தான்… ஸ்மார்ட் வொர்க் பழகியவர்களுக்கும், தகுதியானவர்களுக்குமான வித்தியாசம் புரியும்னு நம்புறேன்…
-
இந்த ஸ்மார்ட் வொர்க் பழகுவதற்கான வாய்ப்பு எத்தனை கிராமப்பகுதி மாணவர்களுக்கும்… சாதியப் படிநிலையில் கீழே இருப்பவர்களுக்கும் கிடைச்சிருக்கும்னு நெனைக்குறீங்க??? அந்த மாணவர்களுக்கும் இதையெல்லாம் பழக இலவச பயிற்சி வகுப்புகளை அரசே நடத்தனும்னு ஒரு கோரிக்கை கிளம்புது இல்ல… அதுதான் அவர்களுடைய வெற்றி… அந்த ஸ்மார்ட் வொர்க் பழகியவர்களுக்கானப் போட்டியில் நம்மை எல்லாம் உள்ளே தள்ளிக்குறோம். இந்த தேர்வுமுறையே தப்பு, நுழைவுத்தேர்வுகளே மோசடியானதுன்றதுதான்… இறுதி நோக்கமா இருக்க முடியும்… ஒட்டுமொத்தத்தில் தேர்வு முறையே தவறானதுன்ற உச்சகட்ட முடிவுக்கு வர காலதாமதம் ஆகும்… மாற்றுக்கல்வி சார்ந்த சிந்தனைகளின் தொடக்கப்புள்ளியா அது அமையும்… அந்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்தாகனும்ன்றது இப்போதைக்கு உட்டோப்பியனாகத்தெரியும்… ஆனால், அந்த முறைபற்றியப் பேச்சிலும் குலக்கல்வித்திட்டத்தைக் கொண்டு வந்துசேர்க்க இங்க குறுக்குசால் ஓட்டுபவர்களால் முடியும்… அதையெல்லாம் களைந்து அதுபற்றிய பேச்சுக்கு நாம போய் சேர தாமதமாகும்… அல்லது, சேராமலே கூடப் போகலாம்…
-
தகுதித் தேர்வுகள் முழுக்க முழுக்க பள்ளிக்கல்வியின் முக்கியத்துவத்தை குறைப்பதற்கான முன்னேற்பாடுதான். ஆசிரியர் தகுதித் தேர்வில் Weightage Mark அப்படிங்குற ஒரு முறையைக் கொண்டு வந்தாங்க… அதைக் கணக்கிடும் முறையில் ஆசிரியர் பயிற்சி முடித்த மாணவரின் 12-ம் வகுப்பு மதிப்பெண்ணில் இருந்து குறிப்பிட்ட சதவிகிதம், இளநிலை படிப்பின் மதிப்பெண்ணில் இருந்து குறிப்பிட்ட சதவிகிதம், கல்வியியல் படிப்பில் இருந்து குறிப்பிட்ட சதவிகிதம், நுழைவுத் தேர்வில் இருந்து குறிப்பிட்ட சதவிகிதம் எடுத்து கணக்கிடப்படும் முறை இது. மேலோட்டமாகப் பார்த்தால், அட! பள்ளிக்காலத்தில் இருந்தே ஒருத்தனை மதிப்பிடும் போது கண்சிஸ்டன்ட்டானவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்ன்னு தோணலாம்… ஆனா, அதிலும் இந்த சிக்கல் உண்டு… இந்த நுழைவுத்தேர்வுகளுக்கு ஒதுக்கப்படும் சதவிகிதத்தின் அளவு 60. மற்ற மூன்றும் 10+15+15 என்ற அளவில் இருக்கும் போது இந்த நாற்பது சதவிகிதத்தில் சராசரியாக, அதற்கும் குறைவா இருந்தாலும் கூட … நுழைவுத்தேர்வில் இந்த ஸ்மார்ட் வொர்க்கில் அதிகமாக அடித்தால் வெற்றிதான்… பள்ளி, கல்லூரிகளில் பெற்ற மதிப்பெண்ணிற்குப் பெரிய தாக்கமே இந்த முறையில் கிடையாது. இப்படியே நுழைவுத்தேர்வுகளின் முக்கியத்துவம் கூடும் போது… பள்ளிக்கல்வியின் முக்கியத்துவம் குறையும்…
-
இந்த நுழைவுத்தேர்வுகள் மூலம் ஒட்டுமொத்த இடங்களை மதிப்பெண் வாரியாக மொத்த இடங்களை நிரப்பாமல், தகுதிக்கான மதிப்பெண் என ஒன்றை நிர்ணயிப்பது, பெரும் சதியுடனே தொடர்புடையது… திரும்பவும் சொல்றேன்… இது கான்ஸ்பிரசியா தோணலாம்… 100-க்கு 60-க்கு மேலெடுத்தால் தான் தகுதியுடையவர்கள் என நிர்ணயித்து… குறைஞ்சது இந்தப்பிரிவினர் 40-வது எடுத்தால் தான்… நீங்கள் தகுதிபெற்றவர்னு அறிவிக்கும் போது… தகுதியானவர்களுக் மட்டுமே இடங்களை ஒதுக்கீடு செய்து தொடர்ந்து Backlog Vaccant கணக்கு காண்பித்து… இதுக்குத்தான் ரிசர்வேஷன், கோட்டா எதுவுமே கூடாது என்ற வாதத்தை நோக்கி நகர்த்தி… இடஒதுக்கீட்டை முழுமையாக நீக்கும் சதிதான்… தகுதித்தேர்வு… இது காண்ஸ்பிரசியாக இருக்கும் பட்சத்தில் நலம்… ஆனால், அதற்கான வாய்ப்புகள் கம்மி… நீட்டைத் தொடர்ந்து பொறியியல், கலை அறிவியல் படிப்புகளுக்கும் கொண்டு வரவுள்ள முன்னறிவுப்புகள் தெரியும் என நம்புகிறேன். இந்த தகுதித்தேர்வுகளின் அடிப்படையில் மட்டும் நிரப்பப்படும் போது பள்ளிக்கல்வியின் முக்கியத்துவமே அடிபட்டுப்போகிறதே…
-
இடஒதுக்கீடு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நீக்கப்பட வேண்டும் என அம்பேத்கரை மேற்கோள் காட்டி… இடஒதுக்கீடு இன்னும் எத்தனை நாளைக்குன்னு வாய்ச்சவடால் விடுவதற்கான ஏற்பாடுதான் இது. இட ஒதுக்கீட்டை நீக்குவதற்கான நியாயமான எந்தக் காரியத்தையும் நாம் செய்யாத போது, செய்யத்தயாராக இல்லாத போது, அதை செய்ய விரும்பாத சூழ்நிலையில்… அதை ஒழிக்க வேறு வழிகளைத் தேட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது… அதற்கான சரியான ஆயுதம் தான் இந்த தகுதித்தேர்வுகள். வரிசையாக அத்தனை கல்வி முறைகளுக்கும் இந்த வகையான தகுதித்தேர்வுகள் கொண்டு வரப்படுவது அதை நோக்கித்தான் அவர்கள் செல்கிறார்கள்னு உறுதியா நம்ப வைக்குது… கல்வியில் இடஒதுக்கீட்டை ஒழிச்சாபோதும்… வேலையில் இட ஒதுக்கீட்டைத்தானா ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஒழிச்சுர முடியும்…
-
நுழைவுத்தேர்வினால், நாங்க எவ்வளவு பாதிக்கப்படுறோம்… 99/100 மதிப்பெண் எடுத்துட்டு எங்களுக்கு கிடைக்காத இடம் 40/50 எடுத்த அவங்களுக்குக் கிடைக்குதுன்னு நீங்க வாதம் செய்யுறவரா இருந்தா… உங்களுக்கு அறிவே கிடையாது பாஸ்… சுத்தமா பொது அறிவே கிடையாது… உங்களுடைய பொது அறிவை வளர்த்துக்கொள்ள நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது கடந்த சில ஆண்டுகளின் மருத்துவ,பொறியியல் படிப்புகளுக்கான CutOff மதிப்பெண் சதவிகிதம்… கடந்த 10 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட வருடம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான கட்ஆஃப் மதிப்பெண் அதிகம்… (அதற்கான லிங்க் கிடைச்சவுடன் கீழ பதிவு செய்யுறேன்…) 40,50 மதிப்பெண் எடுத்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் கிடைச்சது எல்லாம் எந்த வருசத்துலன்னு தேடிப்பார்த்தா நலம்… சும்மா எழுபது வருசமா ஒரே பல்லவியைத் திரும்பப் பாடாதீங்க… கள நிலவரம் என்னன்னு தெரிஞ்சுட்டுப்பேசலாம்… இப்போது இருக்கும் ஒற்றை இலக்க மதிப்பெண் வித்தியாசம் கூட அத்தனை ஏற்றத்தாழ்வுகளையும் கடந்த கடிண உழைப்பு…உங்களுடைய இந்த அறிவுகெட்ட பேச்சு அந்த உழைப்பை கேலி செய்யுறதைப் பார்க்கும் போது… ப்ச்ச்ச்ச்ச்ச்…
-
பொருளாதாரப்படிநிலை அடிப்படையில் இடஒதுக்கீடுன்ற கோஷம் இன்னும் கேலிக்கூத்தானது… மேலோட்டமாகப் பார்த்தா சரி மாதிரியே தெரியும்… இங்க ஏற்றத்தாழ்வுகளும்… வண்கொடுமைகளும் பொருளாதார அடிப்படையில் இல்லை… ‘கூலிங் க்ளாஸ் போடுறான், ஜீன்ஸ் பேண்ட் போடுறான், வண்டில போறான்னு’ இப்போ நீங்கப் பேசுறதெல்லாம், ஒரு காலத்துல தோளில் துண்டு போட்டிருக்கான்,ஜாக்கெட் போட்டிருக்கா,செருப்பு போட்டு நடக்குறியா என்பதன் பரிணாம வளர்ச்சிதான். வைக்கம், திண்ணியம், வாச்சாத்தி, கீழ்வெண்மணி எல்லாம் பழங்கதைகள் இல்லையே… இப்போ, இல்லாமப் போயிடலயே… நாய்க்கன்கொட்டாயில் நடந்தவை எல்லாம் இப்போதான்… இளவரசனும், சங்கரும், கோகுல்ராஜும் கடந்த காலம் இல்லியே… இப்போ நடந்தவை தானே… சாதிய ஒழிப்பையோ… சாதியப்படி நிலை ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வுகளோ எந்த விதத்திலும்குறையாத காலத்தில், பொருளாதார மேம்பாடுகள் இந்த ஏற்றத்தாழ்வுகளை வேற ஒரு படிநிலைக்குத்தான் கொண்டுபோயிருக்கேதவிர சமநிலைப்படுத்தல… இந்த நிலையில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடுங்குற வாதமே மொன்னைத்தனமானது…
-
இடஒதுக்கீடு நீங்கள் கொண்டாடுற மேற்குலக நாடுகளிலும் அமெரிக்காவிலுமே கூட இருக்குன்றது உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம்… தெரிஞ்சிருந்தாலும் அது வேற… இது வேறன்னு அமைதியா போகலாம்… சமூக ஏற்றத்தாழ்வுகள் இருந்த, இருக்கும் எல்லா இடங்களிலுமே… அதனை சமப்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்துதான் தீரும்… Affirmative Action,Positive Descrimination மாதிரியான வார்த்தைகள் பற்றித்தெரிஞ்சுக்குறது நல்லது.
-
சாதியக் கொடுமைகள், சாதிய ஏற்றத்தாழ்வுகளோட வரலாறும் நீண்டது… வகுப்புவாரி உரிமைக்கான போராட்ட வரலாறும் நீண்ட நெடியது… வகுப்புவாரி உரிமை தொடர்பான விவாதங்களும் நீண்டது… இவ்வளவு நீண்ட கொடுமைகளுக்கான சமப்படுத்தும் நடவடிக்கைகளை அவ்வளவு எளிதா செய்துர முடியாது… அப்படி சமமாகிடக்கூடாதுன்னு விரும்புற சக்திகள் அதிகமிருக்கும் போது இன்னும் கஷ்டம்… அப்போ, இடஒதுக்கீட்டை ஒழிக்குறது இந்த மாதிரியான குறுக்குவழிகள் மூலமாத்தான் சாத்தியம்… அதுதான் இப்போ நடக்குறது…
-
கடந்த மூன்று நாட்களாக, இருந்த மன உளைச்சலில் எது எழுதினாலும், பேசினாலும் இயல்புக்கு மீறி சில வார்த்தைகளை உபயோகிக்க வேண்டி வரும்னு அமைதியா இருந்து… ஒரு கட்டத்துல எழுத ஆரம்பிச்சேன்…

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License